Print this page

மூட்டைப்பூச்சிகளின் சேஷ்டை . குடி அரசு - செய்தி விளக்கம் - 29.11.1931

Rate this item
(0 votes)

'பம்பாய் ஐக்கோர்ட்டிலிருந்து டாக்டர் அம்பெட்காருக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இங்கிலாந்திலிருப்பதால் இச்சம்மன் திரும்பி வந்து விட்டது. அவர் இந்தியாவில் அடி வைத்தவுடன் அவரை வரவேற்க இச்சம்மன் தயாரயிருக்கும். ஐந்தாவது மாகாண மாஜிஸ்திரேட் டால் வழக்கு விசாரிக்கப்படும், பம்பாய் எல்பினஸ்டன் ரோடு, கோவாப் பரோட்டிவ் கிரெட்டிட் சொசைட்டியின் காரியதரிசி திரு.ராமகிருஷ்ணா வால் மேற்படி வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. டாக்டர் அம்பெட்கார் அடிதடி, கொள்ளை, சட்டவிரோதமான கூட்டத்தில் சேர்ந்தது ஆகியவை களே அவ் வழக்கு தொடர்வதற்கு காரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றது' என்று பத்திரிகைகளில் ஒரு செய்தி காணப்படுகின்றது. இதன் உண்மை என்னவோ அதைப்பற்றி நாம் தற்சமயம் ஒன்றும் கூறவிரும்பவில்லை. ஆனால், காங்கிரஸ், காந்தீயம் இவைகளுக்கு விரோதமான அபிப்பிராயம் உடையவர்கள் யாரோ அவர்களை நம் நாட்டுப் பார்ப்பனர்களும், அவர் களால் தூண்டப்பட்ட கோடரிக்காம்புகளும், சும்மாவிடமாட்டார்கள் என்ப தும், மூட்டைப் பூச்சிகள் போல அவர்களுக்கு ஏதாவது சில்லரைத் தொந்தரவுகளைச் செய்து கொண்டே இருப்பார்கள் என்பதும் ஆகிய விஷயத்தை மாத்திரம் நினைப்பு மூட்டுகிறோம். 

குடி அரசு - செய்தி விளக்கம் - 29.11.1931

 
Read 48 times